ரசிகர்கள் ஷாக் ஆனதால் அந்த காட்சியை நீக்க இயக்குநரிடம் கெஞ்சிய பிரபல நடிகை

Sasikala| Last Updated: புதன், 8 நவம்பர் 2017 (14:18 IST)
காதல் கண் கட்டுதே திரைபடம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களீன் இதயத்தையும் கொள்ளை கொண்டவர் நடிகை  அதுல்யா ரவி.

 
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றால், அதை தொடர்ந்து அந்த படத்தில் நடித்த கலைஞர்களுக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புக்கள் வரும். அந்த வகையில் காதல் கண்கட்டுதே என்ற சிறுபட்ஜெட் படத்திற்கு பிறகு தற்போது V.Z. துரை  இயக்கத்தில் ஏமாலி என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவர் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது. இதை  டீசரில் கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். இதை தொடர்ந்து அதுல்யா சமீபத்தில் பேசுகையில் இவை படத்தில் பார்க்கும்  போது தவறாக தெரியாது, பாசிட்டிவான கதாபாத்திரம்தான் என்று கூறியுள்ளார். இருந்தாலும் இந்த காட்சிகளை படத்திலிருந்து  நீக்க, இயக்குனரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்’ என்று அதுல்யா கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :