போலி செய்தி பரப்பியவருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த நடிகர் சிம்பு!

Sasikala| Last Updated: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (11:37 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு கிடைத்த புகழ், இனிமேல் இதுபோன்ற ஒரு புகழ் யாருக்காவது கிடைக்குமா என்பது சந்தேகமே. இவருக்கு பல்வேறு திரைபிரபலங்கள் ஆதரவு தெரிவித்தும், ட்வீட் செய்தும் தங்களுடைய கருத்தை தெரிவித்து உள்ளனர்.

 
நடிகர் சிம்பு சமீபத்தில் பிக்பாஸ் புகழ் ஓவியாவை திருமணம் செய்ய தயார் என்று டுவீட் செய்ததாக செய்திகள் பரவின, ஆனால் அப்போதே அந்த டுவீட் போலி என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் சிம்புவுக்கு ஓவியா பதில் ட்வீட் செய்துள்ளதாகவும், அதில் உங்களை திருமணம் செய்ய விருப்பம் இல்லை  பிரதர். நான் இன்னும் ஆரவை காதலித்து வருகிறேன் என்று நடிகை ஓவியா ட்வீட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 
இதனை தொடர்ந்து சிம்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த போலி செய்திக்கு பின் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும்,  இறுதி எச்சரிக்கை. இதுபோல் மீண்டும் தொடர்ந்தால், வித்தியாசமான வழியில் வித்தியாசமான பதில் வரும் என்று  கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :