தமிழில் டப்பிங் பேசிய நஸ்ரியா கணவர்


cauveri manickam| Last Modified வியாழன், 13 ஜூலை 2017 (17:51 IST)
நஸ்ரியாவின் கணவரான ஃபஹத் ஃபாசில், ‘வேலைக்காரன்’ படத்துக்காகத் தமிழில் டப்பிங் பேசியுள்ளார்.

 

 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் இறுதியில் ரிலீஸாகும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஃபஹத் ஃபாசில், தமிழிலேயே தன்னுடைய போர்ஷனுக்கு டப்பிங் பேசி அசத்தியுள்ளார். பிறமொழி நடிகர்களாக இருந்தாலும், தமிழில் டப்பிங் பேச அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஸ்பைடர்’ படத்தில், மகேஷ் பாபு தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :