வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2016 (16:12 IST)

"என்னை நோக்கி பாயும் தோட்டா": ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!!

அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றிக்கு பின்னர் கவுதம் மேனன் இயக்கி வரும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.


 
 
தனுஷ் - கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணி முதன் முறையாக இணைந்திருக்கும் படம். இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
 
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தனுஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


 

 
இருவேறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து வரும் இப்படத்தின் முதல் கெட்டப்பை படக் குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.