Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தன்னை திருத்தும் உரிமை தனது அம்மாவை தவிர வேறு யாருக்கும் இல்லை: காயத்ரி ரகுராம்!

 
Sasikala| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (18:33 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் ஆரம்பத்தில் இருந்தே சில தவறான வார்த்தைகளை பேசி எதாவது சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். 'சேரி பிகேவியர்' என பரணியை சொன்னதால் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

 
 
அதுமட்டுமின்றி பல நேரங்களில் கெட்ட வார்த்தைகளையும் பேசியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் இதை குறைத்துக்கொள்ளுன்படி மூன்று வாரங்களாக அவருக்கு அறிவுரை கூறினார்.
 
இதுபற்றி நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய காயத்ரி, "நீ பெரிய ஹார்ஆ என்று கேட்டது கேவலமாக இருக்கிறதா. இது கெட்ட வார்த்தையா? என்னால் மெதுவாகத்தான் குறைத்துக்கொள்ள முடியும், திடீர்னு கெட்ட வார்த்தையை குறைச்சுக்க முடியாது. கோபத்தில் இருக்கும் போது என்ன வார்த்தை பேசணும்னு யோசிச்சிட்டிருக்க முடியுமா? என்று தான் செய்யும் தவறை ஏற்றமுடியாமல், என்னை டிஸ்கிரேஜ் பண்ணா என்னால முடியாது என்று கூறினார்
 
மேலும் "நான் அப்படிதான். என் தப்பை சரிசெய்ய என் அம்மாவுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. வேறு யாருக்கும் இல்லை என கூறியது பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :