1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 29 அக்டோபர் 2014 (12:34 IST)

கமல், விஜய் படங்களால் பிரபலமாகிவரும் இசிஆர் ஸ்டுடியோ

வடபழனிதான் இதுவரை தமிழ் சினிமாவின் இதயமாக இருந்தது. ஏவிஎம், வாஹினி என புகழ்பெற்ற ஸ்டுடியோக்கள் இயங்கி வந்த இடம். போக்குவரத்து நெருக்கடி மற்றும் ஸ்டுடியோக்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களாக மாறுவதால் வடபழனியின் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இப்போதெல்லாம் சூட்டிங் என்றால் கேமராவை தூக்கிக் கொண்டு இசிஆர் சென்று விடுகின்றனர். பெரும்பாலான நடிகர்களின் வீடுகள் இசிஆர் கடற்கரையை ஒட்டிதான் இருக்கின்றன.
 
இந்த மாற்றத்தை கணித்து இசிஆரை மையமாக வைத்து பல ஸ்டுடியோக்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது 25 ஏக்கரில் பிரமாண்டமாக நிற்கும் ஆதித்யாராம் ஸ்டுடியோ. இங்குதான் கமலின் தசாவதாரம் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பும் இங்குதான் நடக்க உள்ளது.
 
விரைவில் தமிழ் சினிமாவின் தலைநகரம் வடபழனியிலிருந்து இசிஆருக்கு மாறும் என்பதையே இது காட்டுகிறது.