Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நயன்தாரா படத்தின் கதை திருடப்பட்டதா...? எழுத்தாளர் புகார்


Sugapriya Prakash| Last Modified வியாழன், 9 மார்ச் 2017 (16:04 IST)
நயன்தாரா நடித்துவரும் டோரா படத்தின் கதை என்னுடையது, அதனை திருடி படம் செய்கிறார்கள் என்று ஒருவர் புகார் தந்திருக்கிறார்.

 
 
சற்குணம் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கிவரும் படம், டோரா. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ஸ்ரீதர் என்பவர், இது என்னுடைய கதை, திருடி படமாக்கியிருக்கிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஆகியவற்றில் புகார் தந்துள்ளார்.
 
அலிபாபாவும் அற்புத காரும் என்ற படத்தை 2013 -இல் ஸ்ரீதர் தொடங்கியிருக்கிறார். ஆனால், படப்பிடிப்பு தொடர்ந்து நடக்காமல் படம் கைவிடப்பட்டது. அந்தப் படத்தின் கதையைத்தான் அடித்து டோராவாக்கியிருக்கிறார் தாஸ் ராமசாமி என்பது ஸ்ரீதரின் குற்றச்சாட்டு.
 
ஸ்ரீரின் வேகத்தைப் பார்த்தால் அவர் சொல்வதில் உண்மை இருக்கும் என்றே தோன்றுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :