வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 21 ஜனவரி 2017 (12:07 IST)

பீட்டா உறுப்பினர்கள் வேண்டாம் என ரஜினி முன்னிலையில் மனு...

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி உடனடியாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து ஐந்தாவதாக நாட்களாக போராட்டங்களை தமிழகம் முழுக்க நடத்தி வருகின்றனர்.

 
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான உணர்வைக் காட்டவே உண்ணாவிரதம்  மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் எந்த வகையிலும் குறைந்துவிடக்  கூடாது என்பதால், நடிகர் சங்க உண்ணாவிரதத்தை மீடியா படம் பிடிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என நடிகர்  சங்கத் தலைவர் நாசர் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இதனை தொடர்ந்து நடிகர் சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரதத்தின் போது தமிழ் திரைப்பட கலாச்சார பாதுகாப்புக் குழுவைச்  சேர்ந்த இயக்குநர்கள் சேரன், சுரேஷ் காமாட்சி ஆகியோர் ரஜினி முன்னிலையில் கொடுத்த ஒரு மனு அனைவரின்  கவனத்தையும் ஈர்த்தது. மேலும் பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நடிகர்,  நடிகைகள் இங்கு வந்து இரட்டை  வேடம் போடுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
அந்த மனுவில்,
 
"பீட்டா அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நடிகர் நடிகைகளை அந்த அமைப்பிலிருந்து வெளியேற நடிகர் சங்கம் உத்தரவிட  வேண்டும். "அப்படி நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்காத நடிகர் நடிகைகளை உடனடியாக சங்கத்திலிருந்து வெளியேற்ற  வேண்டும். "வெளியேறாத நடிகர் நடிகைகளின் விபரங்கள் பிற்காலத்தில் தெரிய வந்தால், அவர்களுக்கு தொழில் ஒத்துழைப்பு  கொடுக்கக் கூடாது. "தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் என்ற பெயரை 'தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம்' என்று  உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்," என்று நான்கு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
 
இந்த மனுவைப் பார்த்த ரஜினி, 'ஏன் இன்னும் பெயர் மாற்றப்படவில்லை? அதிலென்ன பிரச்சினை?" என்று கேட்டதற்கு, "அது  தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று விஷால் பதிலளித்துள்ளார்.