வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2017 (13:04 IST)

மீடியா கவரேஜ் வேண்டாம் என நடிகர் சங்கத் தலைவர் நாசர் கோரிக்கை!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி உடனடியாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்களும் இளைஞர்களும் கடந்த நான்கு நாட்களாக போராட்டங்களை தமிழகம் முழுக்க  நடத்தி வருகின்றனர்.

 
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான உணர்வைக் காட்டவே நடிகர் சங்கம் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் எந்த வகையிலும் குறைந்துவிடக் கூடாது என்பதால், நடிகர் சங்க உண்ணாவிரதத்தை மீடியா படம் பிடிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என நடிகர் சங்கத் தலைவர் நாசர்  கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின் முக்கியத்துவம் குறையும் என்பதாலும், மீடியா முழுக்க நடிகர்களைக் கவர் பண்ணுவதில்  இருக்கும்.  இதனால் கமல் உள்ளிட்டோரும் இதனையே வலியுறுத்தினார். இந்நிலையில் மீடியா கவரேஜ் இல்லாமல் நடிகர் சங்க உண்ணாவிரதம் நடந்து வருகிறது. படங்கள் மற்றும் வீடியோக்களை நடிகர் சங்கமே எடுத்து அனுப்பி வருகிறது.