Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜூலியை விடாமல் பாட்டுப்பாடி வெறுப்பேற்றும் சக்தி மற்றும் சக போட்டியாளர்கள்!

Sasikala| Last Modified வெள்ளி, 14 ஜூலை 2017 (16:15 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஆபாசமாக இருப்பதால் அதை தடை செய்யவேண்டும் என ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தனர். 'சேரி' என்ற வார்த்தையை நடிகை காயத்ரி பயன்படுத்தியதால் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
இந்நிலையில் ஆரம்பம் முதலே ஜூலியை வைத்தே ஆர்த்தி, காயத்ரி போன்றவர்கள் வம்பு சண்டை போட்டனர். தற்போது அதில் சக்தி, ஆரார், சினேகன், நமீதா ஆகியோரும் இணைந்துள்ளனர். சக போட்டியாளர்கள் ஜூலியை மிகவும் கேவலாமாகவும், அசிங்கமாகவும் பேசி வருகிறார்கள்.
 
ஒரு நிகழ்ச்சியின்போது ஜூலி ஆராரை பிடித்திருப்பதாக காயத்ரியிடம் கூறினார். ஆனால் ஜூலி ரகசியமாக கூறியதை காயத்ரி  மற்றவர்களிடம் கூறி கிண்டல் செய்து வருகிறார். தற்போது சக்தியும் மற்ற போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு ஜூலியை  ரொம்ப மட்டம் தட்டி பேசி வருகின்றனர். காயத்ரியும், ஆராரும் சேர்ந்து மிகவும் தகாத முறையில் ஜூலியை விமர்சித்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :