அஜித் சிக்ஸ் பேக்: கிராபிக்ஸ் சர்ச்சைக்கு இயக்குனர் முற்றுபுள்ளி


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (21:38 IST)
அஜித்தின் 57வது படமான விவேகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து சிலர் சமூக வலைதளங்களில் அது அஜித், கிராபிக்ஸ் என்று கூறிவந்தனர். இந்த சர்ச்சைக்கு இயக்குநர் சிவா முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

 


பிப்ரவரி 2-ம் தேதி அஜித்தின் 57வது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விவேகம் என்ற தலைப்புடன் வெளிவந்தது. அதில் அஜித் சிக்ஸ் பேக் உடலுடன் இருப்பது போல் வெளியானது.

சமூக வலைதளங்களில் இது கிராபிக்ஸ் உடம்பு, VFX, வேறு ஒருவரின் உடல் என்று ஒருபக்கம் சிலர் கேலி செய்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சிவா இதுகுறித்து கூறியதாவது:-

இந்த படத்திற்காக அஜித் தினமும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் உடற்பயிற்சி செய்திருக்கிறார். குறிப்பிட்ட சண்டைகாட்சி படமாக்கும் போது படப்பிடிப்பு தளத்திலேயே 45 நிமிடம் கடினமான உடற்பயிற்சியை மேற்கொண்டார். படம் வெளியாகும் போது இது குறித்த உண்மை அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :