1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: சனி, 3 டிசம்பர் 2016 (10:23 IST)

எமி ஜாக்சன் மொபைலில் இருந்த படங்கள் - ஷாக் ஆன இயக்குனர் ஷங்கர்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோரின் நடிப்பில், ரூ.350 கோடி செலவில் உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.


 

 
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை பற்றிய எந்த ரகசியங்களும், புகைப்படங்களும் வெளியாகிவிடக்கூடாது என்பதில் படப்பிடிப்புக் குழு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. அதையும் மீறி, அக்‌ஷய்குமாரின் கெட்டப் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது.
 
எனவே கட்டுப்பாடு தீவிரமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்த யாருக்கும் அனுமதி இல்லை. 
 
இந்நிலையில், சமீபத்தில் எமி ஜாக்சனின் மொபைலை பார்த்த ஷங்கர் அதிர்ச்சி அடைந்தாராம். காரணம், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் அவரின் மொபைலில் இருந்தன. 
 
அவரை கண்டித்த ஷங்கர், உடனடியாக தன் கண் முன்னாலேயே அவற்றை மொபைலில் இருந்து நீக்கச் சொல்லியிருக்கிறார். எமியும் அழித்துவிட்டார்.