Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹீரோயினுக்கு பிக் பாக்கெட் அடிக்க சொல்லிக்கொடுத்த மிஷ்கின்

cauveri manickam| Last Modified சனி, 29 ஜூலை 2017 (13:36 IST)
‘துப்பறிவாளன்’ படத்தின் ஹீரோயினுக்கு, பிக் பாக்கெட் அடிக்க சொல்லிக் கொடுத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின். 
‘நேரம்’ படத்தில் நிவின் பாலியின் தங்கையாக நடித்தவர் அனு இம்மானுவேல். மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் ஹீரோயினாக நடித்துவரும் அனு, தமிழில் முதன்முறையாக ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மிஷ்கின் இயக்கும் இந்தப் படத்தில், விஷால் ஹீரோ.

“மிஷ்கின் சாரைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஒப்பீனியன் வைத்திருக்கின்றனர். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவருடன் பணியாற்றியது சந்தோஷமான அனுபவம். அவரை ஏன் முன்கோபி என்று சொல்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. அவருடைய பாணியில் வேலையைச் செய்கிறார். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

கதைப்படி, நான் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளேன். ‘அதற்காக எந்த முன் தயாரிப்பும் வேண்டாம். நான் சொன்னதைச் செய்தாலே போதும்’ என்றார் மிஷ்கின் சார். பிக் பாக்கெட் என்னும் கலையை வெகு எளிதாக அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்” என்கிறார் அனு இம்மானுவேல்.


இதில் மேலும் படிக்கவும் :