மணிரத்னம் படத்தின் ஆலோசகர் என் மகன் ! அபிநந்தன் தந்தை பேட்டி.!

Last Modified வியாழன், 28 பிப்ரவரி 2019 (11:50 IST)
மணிரத்தினம் படத்தின் ஆலோசகர் என் மகன் தான் என அபிநந்தனின் தந்தை பேட்டியளித்துள்ளார். 


 
நேற்றிலிருந்து  சமூக வலைத்தளம் முழுக்க பரபரப்பாக பேசப்படுவது  இந்திய பைலட் அபிநந்தன் என்பவர் குறித்து தான். காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் நுழைந்த இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், பிடிபட்ட 2 விமானிகளில் ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாகிஸ்தான் ராணுவம்,  அபிநந்தன் என்ற வீரரை சிறைபிடித்து வைத்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் அபிநந்தனைப்பற்றி பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில்  அவர் தழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் சென்னை தாம்பரத்தில் வசித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்தது . மேலும் தற்போது அவரைப் பற்றிய ஒரு பிரமிக்கத்தக்க தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதாவது, அற்புத படைப்புகளுக்கு பெயர்போன இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தி்ல்  அபிநந்தன் ஆலோசகராக பணியாற்றி உள்ளதாக அவரின் தந்தை வரதன் கூறியுள்ளார்.


 
காற்று வெளியிடை படம் முழுக்க முழுக்க ஒரு விமான வீரரின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மேலும் படிக்கவும் :