வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (13:17 IST)

லிங்குசாமி தயாரிப்பில் அஜீத்...?

இயக்கத்தைவிட தயாரிப்பதிலும், வெளிநபர்களின் படங்களை வாங்கி வெளியிடுவதிலும்தான் அதிக கவனம் செலுத்துகிறார் லிங்குசாமி. அதுவே மிக நல்லது என்று அஞ்சானுக்குப் பிறகு ரசிகர்களும் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அஜீத்தை வைத்து படம் தயாரிக்கும் தனது விருப்பத்தை வெளியிட்டார் லிங்கு. எவருடைய ஆசையையும் முடிந்தவரை தீர்த்து வைப்பவர் அஜீத். லிங்குசாமிக்கும் உடனடி தீர்ப்பு கிடைத்ததாக கோடம்பாக்கத்தில் மணி அடிக்கிறார்கள்.
 
கௌதம் படத்தில் தற்போது அஜீத் நடித்து வருகிறார். அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படம். இந்தப் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை அஜீத் லிங்குசாமிக்கு தந்திருப்பதாக பேச்சு. அஞ்சானில் விட்டதை அஜீத்தை வைத்து எடுக்க நல்ல வாய்ப்பு. ஜமாய்ங்க.