வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2015 (15:16 IST)

கமலுக்கு என்ன ஆச்சு?

இது மலையாள இயக்குனர் கமல். செலுலாயிட் போன்ற சிறந்த படங்களை தந்தவர். எந்தக் கருத்தாக இருந்தாலும் துணிச்சலாக பேசக்கூடியவர். பிரேமம் படம் குறித்து இவர் பேசிய கருத்துகள் கமலை அறிந்தவர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.
 
பிரேமம் படத்தில் மாணவன் ஆசிரியரை காதலிக்கும் காட்சியையும், மது அருந்திவிட்டு வகுப்புக்கு வருவதையும் கமல் கண்டித்திருந்தார். தமிழகத்தில் இப்படி நடந்திருந்தால் கமலை கொண்டாடியிருப்பார்கள். கேரளா வேறு மாதிரி. சினிமாவில் சொல்லப்படும் கருத்துகளை சினிமாவுக்கு வெளியே வைத்து ஆராய்வதில்லை. முக்கியமாக, நடைமுறை உண்மை எத்தனை கசப்பாக இருப்பினும் அது சினிமாவில் பிரதிபலித்தால் தயங்காமல் ஏற்றுக் கொள்வார்கள்.
 
அந்தவகையில் கமலின் கருத்தை பலரும் விமர்சித்தனர். சக இயக்குனரான பாசில், கமலை கண்டிக்கவே செய்தார். இன்றைய இளைஞர்களைப் பற்றி வேறு எப்படி படம் எடுக்க வேண்டும் என அவர் கமலை கேட்டிருந்தார்.
 
கமலுக்கு பிடித்தமான இயக்குனர் அவரது முன்னாள் உதவி இயக்குனரான ஆஷிக் அபு. மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் குடித்தும், கஞ்சா புகைத்தும் நடப்பதை பின்னணியாக வைத்து, இடுக்கி கோல்ட் என்ற படத்தை எடுத்தவர். அவரை நியூ ஜெனரேஷன் இயக்குனர்களில் முதன்மையானவர் என கமல் கொண்டாடுகிறார். 
 
சிஷ்யனுக்கு ஒரு நீதி, அல்போன்ஸ் புத்திரனுக்கு ஒரு நீதியா?