Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி மும்பை டான் இல்லை: இயக்குனர் ரஞ்சித் விளக்கம்


sivalingam| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (22:44 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள நிலையில் இம்மாதம் இந்த படத்தின் அவர் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


இந்நிலையில் வரும் மே முதல் வாரத்தில் இருந்து ரஞ்சித் இயக்கவுள்ள 'ரஜினி 161' படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இந்த படத்தில் மும்பையை கடந்த 90களில் ஆட்டுவித்த தமிழ் டான் ஹாஜி மஸ்தான் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தியை இயக்குனர் ரஞ்சித் தற்போது மறுத்துள்ளார். ஹாஜி மஸ்தான் கேரக்டரில் ரஜினி நடிக்கவில்லை என்றும் இந்த செய்தியை ரஜினி ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் 'டான்' தான் என்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். தனுஷ் தயாரிக்கும் இந்த படத்தின் நாயகி உள்பட நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :