வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (11:37 IST)

தனுஷுக்கு வில்லனான இயக்குனர்

தனுஷுக்கு வில்லனான இயக்குனர்

தனுஷை வைத்து இரு படங்களை இயக்கியவர் தற்போது தனுஷுக்கு வில்லனாக நடிக்கிறார்.


 


தனுஷ் நடித்த திருடா திருடி, சீடன் படங்களை இயக்கியவர் சுப்பிரமணிய சிவா. திருடா திருடிக்குப் பிறகு இவர் இயக்கிய படங்கள் சரியாகப் போகாததால் ஒருகட்டத்தில் நடிப்பது என தீர்மானித்தார். ஜெயமோகன் ஈழத்தை பின்னணியாக வைத்து எழுதிய துப்பறியும் நாவல் உலோகத்தின் பின்னணியில் தயாரான படத்தில் சுப்பிரமணி சிவா நாயகனாக நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் வில்லனாக நடிக்க சுப்பிரமணிய சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வடசென்னையில் நிறைய தாதாக்கள் உள்ளனர். அவர்களில் ஒருவராக சுப்பிரமணிய சிவா நடிக்க உள்ளார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்