வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : புதன், 25 ஜூன் 2014 (15:37 IST)

த்ரிஷ்யா - 10 வருடங்களுக்குப் பிறகு ஒரு மெகா ஹிட்

மலையாளப் படம் திரிஷ்யத்தின் கன்னட ரீமேக்கான த்ரிஷ்யா மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பி.வாசு இந்த ரீமேக்கை இயக்கியிருந்தார்.
யார் என்ன சொல்லட்டும். அந்தந்த மாநில பெரும்பான்மை ரசிகர்களை கவரும் வண்ணம் ரீமேக் படம் செய்வதில் பி.வாசு ஒரு பிஹெச்டி. சரியாக பத்து வருடங்களுக்கு முன் 2004 ல் ஆப்தமித்ரா என்ற படத்தை விஷ்ணுவர்தன், சௌந்தர்யாவை வைத்து இயக்கினார். மலையாளத்தில் வெளியான மணிசித்திரதாழின் கன்னட ரீமேக். படம் பம்பர்ஹிட். அந்தப் படத்தைப் பார்த்து அதில் இம்ப்ரஸாகி ரஜினி தமிழில் நடித்ததுதான் சந்திரமுகி.
2010 -ல் ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகம், ஆப்தரக்ஷகாவை பி.வாசு இயக்கினார். அதுவும் ஹிட். 35 வாரங்கள் ஓடி சாதனைப் படைத்தது. 2012 -ல் உபேந்திராவை வைத்து பி.வாசு எடுத்த படமும் ஹிட்தான். ஆனால் ஆப்தரக்ஷகாவும், உபேந்திரா நடித்தப் படமும் ரீமேக் கிடையாது. நேரடிப் படங்கள்.
 

2004 -ல் மலையாள மணிசித்திரதாழை தழுவி ஆப்தமித்ரா எடுத்தது போல் சரியாக பத்து வருடங்கள் கழித்து 2014 -ல் த்ரிஷ்யத்தை தழுவி த்ரிஷ்யா படத்தை இயக்கி வெளியிட்டார். படம் பம்பர்ஹிட். ரவிச்சந்திரன், நவ்யா நாயர், பிரபு நடித்த இப்படம் கர்நாடகாவில் கண்டபடி ஓடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
த்ரிஷ்யத்தை தெலுங்கில் வெங்கடேஷ், மீனாவை வைத்து ஸ்ரீப்ரியா இயக்கி வருகிறார். விரைவில் படம் வெளியாகிறது. 22 பீமேல் கோட்டயத்தை தமிழில் கொத்துக்கறியாக்கியவர், த்ரிஷ்யத்தை எப்படி எடுத்திருக்கிறார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
 
தமிழில் த்ரிஷ்யம் ரீமேக்கில் கமல் நடிக்கிறார். ஜுலை 15 படப்பிடிப்பு தொடங்குகிறது. மலையாள ஒரிஜினலை இயக்கிய ஜீத்து ஜோ‌சப்பே தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார்.