வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (17:13 IST)

செப்.28 கொடி மோஷன் போஸ்டர்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ள படம், கொடி. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். அவருக்கு அரசியல்வாதி வேடம் என்கின்றன செய்திகள்.

 
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வரும் புதன்கிழமை - அதாவது செப்டம்பர் 28 இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என தனுஷ் தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை. தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.