Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் தலையிட வேண்டும். பத்திரிகையாளர் தன்யா வேண்டுகோள்


sivalingam| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (22:59 IST)
பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் சமீபத்தில் தனது டுவிட்டரில் 'சுறா' படம் குறித்த தமது விமர்சனத்தை தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் தன்யாவை பத்திரிகைகளில் அச்சிட முடியாத கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினர்.


 
 
ஒரு பெண் என்றும் பாராமல் விஜய் ரசிகர்கள் என்ற போர்வையில் டுவிட்டர் பயனாளிகள் இவ்வாறு நடந்து கொண்டது அனைவரையும் அதிருப்தி அடைய செய்தது
 
இந்த நிலையில் தன்னை தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்தவர்களின் டுவிட்டர் அக்கவுண்ட்களை கண்டுபிடித்து ஆதாரத்துடன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் தன்யா புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'இதுவரை மூன்று பேர்களை கண்டுபிடித்துள்ளோம். விரைவில் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இந்த விஷயத்தில் விஜய் தலையிட்டு தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் அறிக்கை விட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்' என்றும் அவர் மேலும் கூறினார்


இதில் மேலும் படிக்கவும் :