Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மூத்த மகன் யாத்ராவுக்கு தனுஷ் டுவிட்டரில் வாழ்த்து

மூத்த மகன் யாத்ராவுக்கு தனுஷ் டுவிட்டரில் வாழ்த்து


Sasikala| Last Modified திங்கள், 10 அக்டோபர் 2016 (12:43 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி வெற்றி நாயகனாக வலம் வரும் தனுஷ், தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
 
தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர், 2004-ஆம் ஆண்டில், நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் இன்று 10 வது பிறந்தநாள் கொண்டாடும் மூத்த மகன் யாத்ராவுக்கு தனுஷ் டுவிட்டரில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். அவரது டுவீட்டில், 'பொம்மைகளில் இருந்து கேட்ஜெட்களுக்கு மாறியது எத்தகைய வியப்பை உள்ளதோ அதேபோல், இன்று குழந்தையாக இருந்து சிறுவனாகியிருப்பதும் வியப்பை தருகிறது என்றும், பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாத்ரா' என டுவீட் செய்துள்ளார்.
 
தற்போது தனுஷ் நடித்துள்ள 'கொடி' படம் தீபாவாளி பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. மேலும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கேங்க்ஸ்டர் படமான 'வடசென்னை' படத்தில் நடித்துக் கொண்டே, 'பவர் பாண்டி' படத்தை தனுஷ் இயக்கி வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :