ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசை தான் மொழி: வட இந்தியர்களுக்கு சாட்டையடி கொடுத்த பிரபல நடிகர்


sivalingam| Last Modified ஞாயிறு, 16 ஜூலை 2017 (23:59 IST)
 
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தமிழர்கள் ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.


 
 
தமிழர்கள் ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி என்பதால் அவர் தமிழில்தான் கிட்டத்தட்ட அனைத்து பாடல்களையும் பாடினார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லண்டனில் வாழும் வட இந்தியர்கள் இந்தி பாடலையும் பாட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு ரஹ்மான் மறுப்பு தெரிவிக்கவே அவர்கள் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியே சென்றுவிட்டனர்.
 
இந்த சம்பவத்தால் வட இந்தியர்கள் ரஹ்மானை டுவிட்டரில் விமர்சனம் செய்ய அதற்கு தமிழ் நட்சத்திரங்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் சற்று முன் தனது டுவிட்டரில் 'ரஹ்மானுக்கு எந்த மொழியும் கிடையாது. அவருக்கு இசை மட்டுமே மொழி. இசையை தவிர அவருக்கு எந்த மொழியும் தெரியாது என்று கூறி பின்னர் 'ரஹ்மான் ரஹ்மான் தான் 'ஜெய் ஹோ' என்று பதிவு செய்துள்ளார். தனுஷின் இந்த சாட்டையடி பதிலால் வட இந்தியர்கள் அமைதியாகிவிட்டதாக தெரிகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :