திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (21:33 IST)

விஐபி 2 முதல் காட்சி ரத்து; தனுஷ் அதிரடி: ரசிகர்கள் ஏமாற்றம்!!

விஐபி 2 படத்தின் முதல் ஷோ காலை 5 மணிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார். 


 
 
கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளிவருவதாக இருந்த இந்த படம் சென்சார் தாமதம் காரணமாக நாளை தமிழில் வெளியாகவுள்ளது. ஹிந்தி மற்றும் தெலுங்கு 18 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், காலை 5 மணிக்கு இப்படத்தின் முதல் ஷோ வெளியாகாது என்று தனுஷ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் தரப்பு அதிகாலை காட்சிகளை நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் விஐபி 2 படத்தின் காலை காட்சிகள் காலை 8 மணிக்கு வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.