ஹிந்திப் படத்தை ரீமேக் செய்கிறார் தனுஷ்..


Cauveri Manickam (Murugan)| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (17:02 IST)
ஹிந்தியில் வெளியான ‘பர்ஃபி’ படத்தை, தமிழில் ரீமேக் செய்யப் போகிறார் தனுஷ். 

 

 
அமிதாப்புடன் நடித்த ‘ஷமிதாப்’, ‘ராஞ்ஹெனா’ என பாலிவுட் ரசிகர்களுக்கு ஓரளவுக்குப் பழக்கமானவர்தான் தனுஷ். தற்போது ‘விஐபி 2’ படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால், இதையும் ஹிந்தியில் ரிலீஸ் செய்ய இருக்கிறார். மும்பையில் நடைபெற்ற ‘விஐபி 2’ புரமோஷன் நிகழ்ச்சியில், புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார் தனுஷ்.
 
பாலிவுட் படமான ‘பர்ஃபி’யை, தமிழில் ரீமேக் செய்யப் போகிறார் தனுஷ் என்பதுதான் அது. ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் ‘பர்ஃபி’. அனுராக் பாசு இயக்கிய இந்தப் படத்தில், காது கேட்காத – வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பார் ரன்பீர் கபூர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :