ஒரே நாளில் மோதும் தனுஷ்-ராகவா லாரன்ஸ்-ஜெயம்ரவி

sivalingam| Last Modified வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (21:18 IST)
கோலிவுட் திரையுலகில் தற்போதைய இளையதலைமுறை நடிகர்களின் ஆரோக்கியமான போட்டி திரைத்துறையை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்கின்றது என்றால் அது மிகையில்லை
அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால் ஒரே நாளில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவருவதை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக முக்கிய விசேஷ நாட்களில் மூன்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

அந்த வகையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஏற்கனவே இந்த நாளில் தனுஷ் இயக்கிய 'பவர் பாண்டி' மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்படுள்ள நிலையில் இன்று ஜெயம் ரவியின் 'வனமகன்' படமும் அதே தேதியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலில் ஒருசில படங்கள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :