தனுஷின் வழக்கில் திடீர் திருப்பம்; அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டது; பரபரப்பாக்கிய மருத்துவ அறிக்கை


Abimukatheeesh| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (19:39 IST)
நடிகர் தனுஷ் தனது மகன் என கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
தனுஷின் பள்ளிக்கூட சான்றிதழ்களில் அங்க அடையாளங்கள் எதுவும் குறிப்பிடாத காரணத்தினால் வழக்கை விசாரித்த நீதிபதி, அங்க அடையாள பரிசோதனைக்கு உத்தரவிட்டார். இந்த பரிசோதனை மதுரை மருத்துவ கல்லூரியில் நடந்தது. இதில் அவரின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீதிமன்றத்தில் மருத்துவ கல்லுரி சார்பில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த விசாரணையில் கதிரேசன் தம்பதியினர் டிஎன்ஏ சோதனைக்கு அனுமதி வழங்க வலியுறுத்த உள்ளனர். 
 
தனுஷ் தரப்பில் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கஸ்தூரி ராஜா கூறியதாவது:-
 
எங்களுக்கு இந்த மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் முழுமையாக படித்துவிட்டு எங்கள் தரப்பு கருத்தை தெரிவிப்போம் என கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :