வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 1 நவம்பர் 2014 (11:30 IST)

மனைவிக்காக கௌரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட தனுஷ்

ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனுஷ் நாயகனாக நடித்தார். அப்படம் வெளிவந்த பின், இனி மனைவியின் இயக்கத்தில் நடிக்கப் போவதில்லை என்று கூறினார். ஆனால் மனைவியின் விருப்பத்தை யாராக இருந்தாலும் தட்ட முடியாதில்லையா.
தனது முந்தைய சபதத்தை மனைவிக்காக திரும்பப் பெற்றுக் கொண்டார் தனுஷ். ஐஸ்வர்யா இயக்கி வரும் வை ராஜா வை படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் வை ராஜா வை படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடித்து வருகின்றனர். டேனியல் பாலாஜி, தாப்ஸி, விவேக் ஆகியோரும் படத்தில் உள்ளனர். யுவன் இசை.
 
இந்தப் படத்தில் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் நடிக்க சம்மதித்துள்ளார்.