வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 27 செப்டம்பர் 2014 (17:39 IST)

அனேகன் - அக்டோபரில் இசை, நவம்பரில் படம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அனேகன் படம் நவம்பர் இறுதியில் திரைக்கு வருகிறது.
 
அனேகனில் தனுஷ் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். ஆக்ஷன் படமாக தயாராகியிருக்கும் இதற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். சுபா கதையை எழுதியுள்ளனர்.
 
படத்தின் பாடல்களை அக்டோபரில் வெளியிட இருப்பதாக ஹாரிஸ் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். படத்தை நவம்பர் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
 
டிசம்பர் 12 லிங்கா வெளியாகிறது. நவம்பர் இறுதியில் அனேகனை வெளியிட்டால் பதினைந்து இருபது நாள்கள் கிடைக்கும். அதனை மனதில் வைத்து நவம்பர் இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது, படத்தை தயாரித்திருக்கும் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட்.