வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2015 (14:03 IST)

இமான், சிம்பு இப்போ தேவா - தடாலடி தமன்

ஒரு முடிவோடுதான் அப்பாடக்கர் படத்துக்கு இசையமைத்து வருகிறார் தமன். லட்சுமி மூவிமேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இமானை ஒரு ஒரு பாடல் பாட வைத்தார் தமன்.
 

 
அடுத்து சிம்பு - ஸ்வாதியை வைத்து ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்தார். இப்போது தேனிசை தென்றலும், கானாவின் நைனாவுமான தேவாவை வைத்து ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளார். 
 
தொழில்முறை பாடகர்களை ஓரங்கட்டி தமன் செய்து வரும் இந்த இசைப்பணியால், பாடல்கள் வெளியாகும் முன்பே அதுகுறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
 
இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்துகின்றனர்.