வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 டிசம்பர் 2018 (20:27 IST)

'பேட்ட' படத்திற்கு அடுத்த நாள் கம்பீரமாக வெளிவரும் கார்த்தியின் 'தேவ்

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்த நாள் அதாவது டிசம்பர் 29ஆம் தேதி கார்த்தியின் 'தேவ்' படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

'தீரன் அதிகாரம் ஒன்று', 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படங்களை அடுத்து ஹாட்ரிக் வெற்றிப்படமாக எதிர்பார்க்கப்படும் படம் கார்த்தி நடித்து வரும் 'தேவ்' திரைப்படம் . இந்த படத்தின் பாடல்கள் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் பாடல்கள் வெளியீட்டு விழாவின் இடம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே சிங்கிள் பாடலாக வெளிவந்த 'அனங்கே சிணுங்கலாமா? நெருங்கி அணைக்கலாமா' என்ற பாடல் சூப்பர் ஹிட் என்பது தெரிந்ததே

இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், விக்னேஷ், அம்ருதா, நிக்கி கல்ராணி, ரேணுகா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.