சங்கமித்ராவுக்கு நடக்கும் நாயகி வேட்டை


bala| Last Modified சனி, 4 பிப்ரவரி 2017 (13:34 IST)
300 கோடி பட்ஜெட், சுந்தர் சி. இயக்கும் முதல் சரித்திரப் படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100 -வது படம் என்று சங்கமித்ராவுக்கு பலவித கிரீடங்கள். அதில், 100 வது படம் என்ற கிரீடத்தை அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு விட்டுத்தந்துள்ளது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

 

ஆர்யா, ஜெயம் ரவி நடிக்க உள்ள சங்கமித்ராவில் நாயகியாவது இந்திய அளவில் தெரிந்த முகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதற்காக தீபிகா படுகோன் மற்றும் சோனாக்ஷி சின்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

முதல் சாய்ஸ் தீபிகா படுகோன். அவர் மறுத்தால் சோனாக்ஷி சின்கா.

சங்கமித்ராவுக்கு ரஹ்மான் இசையமைக்க, பாஜிராவ் மஸ்தானி படத்தின் ஒளிப்பதிவாளர் சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கிராபிக்ஸ் பணிகளை கமலக்கண்ணன் கவனிக்கிறார். கலை இயக்கம் சாபு சிரில்.

படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன், இயக்குனர் பத்ரி ஆகியோர் சுந்தர் சி.க்கு துணையாக உள்ளனர். நாயகி முடிவானதும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :