ஜெய்ப்பூர் செல்லும் ரஜினி & கோ – தர்பார் பரபர படப்பிடிப்பு !

Last Updated: சனி, 17 ஆகஸ்ட் 2019 (18:00 IST)
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு அடுத்தகட்டமாக ஜெய்ப்பூரில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் நடக்க இருக்கிறது.

பேட்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதன் பெரும்பாலான படப்பிடிப்புகள் மும்பையில் நடந்தன.  இதையடுத்து அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 18 ஆம் தேதி தர்பார் படப்பிடிப்புக்காக படக்குழு ஜெய்ப்பூர் செல்ல இருக்கின்றனர். அங்கே சில பாடல் காட்சிகளை எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தர்பார் படத்தில் ரஜினியோடு நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 27 வருடங்களுக்குப் பிறகு ரஜினி இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ரஜினி 1992 ஆம் ஆண்டு வெளியானப் பாண்டியன் படத்தில் போலிஸாக நடித்திருந்தார்.இதில் மேலும் படிக்கவும் :