வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 4 ஜூலை 2015 (12:12 IST)

டெய்சி - அன்புக்காக அலையும் எட்டு வயது சிறுமியின் ஆவி

சார், செமையா ஒரு பேய் கதை இருக்கு என்றால்தான் தயாரிப்பாளர்கள் கதை கேட்க உட்காருகிறார்கள். இயக்குனர்கள், ஏற்கனவே அடித்து துவைத்து காயப் போட்ட பேய் கதைகளை பட்டி டிங்கரிங் பார்த்து பைல்களுடன் அலைகிறார்கள். அதிர்ஷ்ட ஆவி அடிக்காதா என்று அனைவருக்கும் ஆசை, எதிர்பார்ப்பு.
நேற்று பேபி என்ற படம் வெளியானது. ஹாலிவுட் படத்தின் போஸ்டர் முதல்கொண்டு சுட்டிருக்கிறார்கள். அடுத்து டெய்சி என்ற படம் தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களிலும் உள்ள ஒற்றுமை, இரண்டுமே குழந்தைகளை மையப்படுத்திய பேய் படங்கள்.
 
ஜூனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் என்.ஷண்முகசுந்தரம், கே.முகமது யாசின் தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கி வருகிறார். 
 
படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீநாத் கூறுகையில், "ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் ஜனிக்கின்றனர் என்றக் கூற்றை உறுதிபடுத்தும் கதை இது.

டெய்சி அன்புக்காக ஏங்கி அலைபாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியை பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்ளுக்கு தேவையான கருத்தைக் கொண்ட கதை என்பதால் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்" என்றார்.