Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட காஜல் அகர்வால்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 9 ஆகஸ்ட் 2017 (20:34 IST)
நடிகை காஜல் அகர்வால் எண்ணெய் விளம்பரம் ஒன்றில் நடித்தார். அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை மீறி விளம்பரத்தை ஒளிபரப்பியதற்காக வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

 
 
காஜல் அகர்வால் தொடர்ந்த இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், வழக்குக்கான மொத்த செலவையும் காஜல் அகர்வாலையே செலுத்தக் கூறி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
விவிடி தேங்காய் எண்ணெய் நிறுவனம் காஜல் அகர்வால் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தனர். அவர் நடித்திருந்த விளம்பர படத்தை ஓராண்டுக்கு மட்டும் ஒளிபரப்ப வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
 
ஆனால், எண்ணெய் நிறுவனம் ஓராண்டுக்கு பின்னரும் விளம்பரத்தை வெளியிட்டது. இதற்கு தடை கோரியும், ஒப்பந்தத்தை மீறி ஒளிப்பரப்பியதற்காகவும் ரூ.2.50 கோடி இழப்பீடு கோரினார்.
 
ஆனால், இந்த வழக்கை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :