வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: வியாழன், 3 ஏப்ரல் 2014 (12:22 IST)

சென்சார் விதிமுறைகளை மீறியதா கோச்சடையான்?

மார்ச் 19 ஆம் தேதி கோச்சடையான் படத்துக்கு சென்சார் எந்த கட்டும் இல்லாமல் யு சான்றிதழ் அளித்தது. அப்போதே இது சின்ன அளவில் சர்ச்சையை கிளப்பியது.
ஒரு படம் திரையரங்கில் வெளியாகும் வடிவத்தில்தான் சென்சார் செய்யப்பட வேண்டும். அதாவது முழுமையாக முடிந்த பிறகு. ஆனால் கோச்சடையான் மார்ச் 19 சென்சார் உறுப்பினர்களுக்கு திரையிட்டபோது முழுமையாக முடிவடையவில்லை என்பதே சர்ச்சை கிளம்ப காரணம். படத்தின் சவுண்ட் மிக்சிங் பணிகள் உள்பட பல வேலைகள் முடிவடையாத போதே சென்சார் சான்றிதழ் வாங்கிவிட்டதாக கூறப்பட்டது.
 
அதற்கேற்ப படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பல இடங்களில் நடந்து வந்தன. இது சென்சார் கவனத்துக்கும் சென்றது. தற்போது தணிக்கைக்குழு தலைவர் பக்கிரிசாமியே கோச்சடையான் சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார்.
 
கோச்சடையான் முடிவடைந்த பிறகே சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தற்போது நடப்பது 3டி மற்றும் இந்தி பதிப்புக்கான வேலைகள். கோச்சடையான் சென்சார் செய்யப்பட்டதில் தணிக்கை விதிகள் எதுவும் மீறப்படவில்லை என கூறினார்.
 
கோச்சடையான் படம் சம்பந்தப்பட்டவர்கள் அளிக்க வேண்டிய விளக்கத்தை சென்சார் அளிக்க வேண்டிய அவசியமென்ன? இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஒரு படம் ஆளான பிறகு சென்சார் அவர்களிடம் முறைப்படி விளக்கம் கேட்க வேண்டும். படம் திரைக்கு வந்த பிறகு அதனை பார்த்தே சென்சார் விதிகள் மீறப்பட்டுள்ளனவா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும். அதற்குள் படம் சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் விளக்கத்தை வைத்தே சென்சார் இப்படியொரு முடிவுக்கு வருவது சரியா? இந்த கரிசனம் மற்றப் படங்களுக்கும் காட்டப்படுமா? பக்கிரிசாமி அதையும் விளக்கியிருக்கலாம்.