கமல் ஒரு இந்துமத விரோதி. பெங்களூரு சாமியார் புகார்


sivalingam| Last Modified ஞாயிறு, 26 மார்ச் 2017 (23:13 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்ததாக ஒருசிலரால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.


 


இதுகுறித்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் கும்பகோணம் நீதிமன்றங்களில் கமல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூர் சாமியார் பிரணவானந்தா என்பவர் கமலுக்கு எதிராக புகார் கூறியுள்ளார். கமலஹாசன் தொடர்ந்து இந்து விரோதப்போக்குடன் பேசி வருவதாகவும், தேவையில்லாமல் அவர் மகாபாரதத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ராமாயணத்தையும் கூட அவர் தரக்குறைவாக விமர்சித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :