விஜய்யை அடுத்து சிம்பு பிறந்தநாளிற்கு காமன் டிபி...

Last Updated: திங்கள், 29 ஜனவரி 2018 (21:10 IST)
தமிழ் சினிமாவில் நடிகர்களின் பிறந்தநாளை அவர்களது ரசிகர்கள் விமர்சயையாக கொண்டாடுவர். அந்த வகையில், ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் பிறந்தநாள் கலைக்கட்டும். அவர்களது ரசிகர்கள் மக்களுக்கு சில உதவிகளை செய்வர்.

மேல்தட்டு ரசிகர்களை அடுத்து சிம்புவின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்படும். வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் வரப்போகிறது.
இதற்காக ரசிகர்கள் நிறைய பிளான்கள் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் மஹத் வரும் ஜனவரி 31 ஆம் தேதி மாலை 6 மணியளவில் சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷலாக தயாராகியுள்ள டிபி (DP) வெளியிடவுள்ளனர்.
இது போன்று விஜய் பிறந்தநாளன்று காமன் டிபி அறிவிக்கப்பட்டு அதை பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டரில் டிரண்டாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :