வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 23 நவம்பர் 2016 (15:54 IST)

தமிழுக்கு வரும் மோகன்லாலின் ஒப்பம்

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ஒப்பம் திரைப்படம் தமிழில் வெளியாகிறது. தனது கதாபாத்திரத்துக்கான தமிழ் டப்பிங்கை மோகன்லாலே பேசியுள்ளார்.


 
 
ப்ரியதர்ஷன் - மோகன்லால் கூட்டணி பல டஜன் வெற்றிப் படங்களை தந்துள்ளது. என்றாலும் சமீப காலங்களில் இந்த கூட்டணி வெற்றி இலக்கை எட்டவில்லை. இந்நிலையில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம்தான், ஒப்பம்.
 
இதில் கண் தெரியாதவராக மோகன்லால் நடித்திருந்தார். கொலை பழி சுமத்தப்பட்ட மோகன்லால் தனது பார்வை குறைபாட்டை மீறி எப்படி கொலையாளியை கண்டு பிடிக்கிறார் என்பது கதை.
 
இந்தப் படம் விரைவில் தமிழில் வெளியாகிறது.