Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விரைவில் உருவாகிறது ‘முதல்வன் – 2’?

செவ்வாய், 16 மே 2017 (17:38 IST)

Widgets Magazine

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த ‘முதல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம், விரைவில் உருவாகலாம் என்கிறார்கள்.

 
அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான படம் ‘முதல்வன்’. அரசியல்வாதிகளைச் சாடிய இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஷங்கர் மற்றும் இயக்குநர் மாதேஷ் இருவரும் இணைந்து  இந்தப் படத்தைத் தயாரித்தனர். தமிழில் சூப்பர் ஹிட்டானது இந்தப் படம்.
 
எனவே, ‘நாயக்’ என்ற பெயரில் இந்தப் படத்தை 2001ஆம் ஆண்டு ஹிந்தியில் ரீமேக் செய்தனர். அனில் கபூர், ராணி முகர்ஜி,  அம்ரிஷ் புரி நடித்த இந்தப் படத்துக்கு, அனுராக் கஷ்யப் வசனம் எழுதியிருந்தார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில்  ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைத்திருந்தார். ஆனால், இந்தப் படம் சரியாகப் போகவில்லை.
 
இருந்தாலும், 16 வருடங்களுக்குப் பிறகு, ‘நாயக்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. ‘பாகுபலி’ படத்தின்  திரைக்கதையை எழுதிய எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத், இதன் கதையை எழுதி வருகிறார். அநேகமாக ராஜமெளலியே இந்தப் படத்தை இயக்கலாம் என்கிறார்கள். தோல்வியான ஹிந்தியிலேயே இரண்டாம் பாகம்  வரும்போது, சூப்பர் ஹிட்டான தமிழில் வராதா என்ன?


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வெய்ன் பிராவோவுடன் சுற்றும் ஸ்ரேயா - இருவருக்கும் காதலா?

நடிகை ஸ்ரேயா காதலில் விழுந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

news

பாலிவுட்டில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் தமன்

அஜய் தேவ்கன் நடித்துள்ள ‘கோல்மால் 4’ படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம், பாலிவுட்டில் ...

news

மீண்டும் பிகினி உடையில் பிரியங்கா சோப்ரா - வைரல் புகைப்படங்கள்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில், மீண்டும் பிகினி உடை அணிந்த புகைப்படங்களை ...

news

வேண்டாம் என பலர் கூறியும் ரஜினி செய்யச் சொன்னார்: ரம்யா கிருஷ்ணன்!!

சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு பாகுபலி படத்துக்குப் பிறகு சினிமாவில் தனி அந்தஸ்து ...

Widgets Magazine Widgets Magazine