வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 8 ஆகஸ்ட் 2014 (11:12 IST)

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்

பிரபல நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் நேற்று மரணமடைந்தார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
 
தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் சுருளி மனோகர். பிறகு சினிமாவிலும் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இயக்குனர் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
 
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுருளி மனோகர் அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.