வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 4 மே 2015 (11:06 IST)

ஓபனிங் சாங், கவர்ச்சி ஜோடியுடன் கவுண்டமணி ரிட்டர்ன்

கவுண்டணி ஹீரோவாக நடித்த, 49 ஓ இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்துடன் மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கிறார்.
 
இந்தப் படத்தில் கவுண்டமணிக்கு அறிமுகப் பாடல் காட்சி உள்ளது. சமீபத்தில் இந்தப் பாடல் காட்சியை பாபியின் நடன அமைப்பில் படமாக்கினர். அதேபோல் கவுண்டமணிக்கு ஜோடியும் படத்தில் உண்டு.
 
தெலுங்கில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறவர் சனா. ராஜபாட்டை படத்தில் வில்லியாக இவர் நடித்துள்ளார். கவுண்டமணியுடன் இவர்தான் ஜோடியாக நடிக்கிறார். 
 
இதுவரை கால்வாசி படப்பிடிப்பு முடிந்துள்ளது. தொடர்ந்து காட்சிகளை படமாக்கி வருகிறோம் என்றார், படத்தின் இயக்குனர் பால கணபதி.