வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 29 ஜூன் 2017 (15:21 IST)

பிரபுதேவாவுடன் இணையும் பாகுபலி நாயகன் பிரபாஸ்

நடிகர் பிரபுதேவாவின் யங் மங் சங், மெர்லின், குலேபகாவலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் சக்ரிடோல்டி இயக்கும் காமோஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழில் நயன்தாரா நடித்துவரும் கொலையுதிர் காலம் படத்தின் ஹிந்தி பதிப்பாகும்.

 
இப்படத்தில் பிரபுதேவா-தமன்னா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியை மையமாக கொண்ட இப்படத்தின் ஹிந்தி பதிப்பில் பிரபுதேவாவுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
இந்த படத்தில் பாகுபலி கதாநாயகன் பிரபாஸ் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. பாகுபலி படத்திற்கு பிறகு மறுபடியும் பிரபாஸ்-தமன்னா நடிக்கிறார்கள். இப்படத்தில் பிரபாஸுக்கு எந்த மாதிரியான ரோல் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. தற்போது பிரபாஸ் நான்கு மொழிகளில் தயாராகி வரும் சாஹோ என்ற பிரமாண்ட படத்தில்  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.