Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிரஞ்சீவியுடன் இணையும் பவன் கல்யாண்


bala| Last Modified திங்கள், 6 பிப்ரவரி 2017 (18:45 IST)
அண்ணன் சிரஞ்சீவியும், தம்பி பவன் கல்யாணும் ஒருகாலத்தில் அண்ணன், தம்பி உறவுக்கு உதாரணமாக இருந்தனர். சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸுடன் இணைந்த பிறகு அண்ணன், தம்பிக்குள் விரிசல் ஏற்பட்டது. சிரஞ்சீவி மகளின் இரண்டாவது திருமணத்துக்குக்கூட பவன் கல்யாண் வரவில்லை, அந்தளவு பகை.

 

நீரடித்து நீர் விலகாது என்பது போலத்தான் ரத்த பந்தமும். சிரஞ்சீவியும், பவன் கல்யாணும் பழைய பகையை மறந்து மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.

திரிவிக்ரம் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் பவன் கல்யாணும் நடிக்கவிருப்பதாக படத்தை தயாரிக்கும் சுப்பராம ரெட்டி கூறியுள்ளார்.

இந்த தேதியில் ஆந்திராவும், தெலுங்கானாவும் இந்தப் படத்தைதான் அதிகம் எதிர்பார்க்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :