Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியது!

Sasikala| Last Modified திங்கள், 30 ஜனவரி 2017 (17:18 IST)
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் இயக்கிய ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்தான் ‘கைதி நம்பர் 150’. இந்தப்  படத்தை தெலுங்கில் விவி விநாயக் இயக்கியிருந்தார். படத்தில் காஜல் அகர்வால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 
 
நடிகர் சிரஞ்சீவி 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் நடித்த படம் ‘கைதி நம்பர் 150’. இந்தப் படம் சிரஞ்சீவியின் 150வது  படமாகும். தற்போது இந்தப் படம் வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது. இதுநாள் வரை 100 கோடிக்கு மேல் வசூல்  ஈட்டியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி ரசிகர்கள் மட்டுமின்றி சிரஞ்சீவி குடும்பதினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தப் படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு ராய் லக்ஷ்மி சிரஞ்சீவியுடன் நடனமாடியுள்ளார். படத்தை ராம் சரண் தயாரித்துள்ளார்.  இப்படத்தின் வெற்றியை கொண்டாட டோலிவுட் பிரபலங்கள் பலரை விழாவிற்கு அழைக்க ராம் சரண் முடிவு செய்துள்ளாதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :