சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் த கான்சூரிங் 2

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் த கான்சூரிங் 2


Sasikala| Last Updated: வியாழன், 16 ஜூன் 2016 (10:52 IST)
5. TE3N(இந்தி) 
அமிதாப்பச்சன் நடித்துள்ள இந்த இந்தித் திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 11.84 லட்சங்கள்.
 
4. இறைவி 
சென்ற வார இறுதியில் இறைவி சென்னையில் 20.40 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 1.53 கோடி.

 
 
3. ஒருநாள் கூத்து
நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் இதன் வசூல் 26.70 லட்சங்கள்.
 
2. வேலைன்னு வந்தா வெள்ளக்காரன் 
எழிலின் இந்தப் படம் அதன் நகைச்சுவை காட்சிகள் காரணமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது. சென்ற வார இறுதியில் 43.95 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 1.35 கோடியை தனதாக்கியுள்ளது.
 
1. த கான்சூரிங் 2
ஹாலிவுட் பேய் படமான இந்த வாரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 98.27 லட்சங்களை வசூலித்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :