வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 7 ஜூன் 2016 (11:04 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - இறைவி முதலிடம்

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - இறைவி முதலிடம்

5. அ ஆ (தெலுங்கு)
த்ரி விக்ரம்இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள படம், அ ஆ. சென்ற வாரம் வெளியான இத்திரைப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 19.30 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
4. ஹவுஸ்ஃபுல் 3 (இந்தி)
அக்ஷய் குமார் நடித்துள்ள இந்த இந்திப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் இப்படம் 26.30 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
 
3. வேலைன்னு வந்தா வெள்ளக்காரன்
எழிலின் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. விஷ்ணு, நிக்கி கல்ராணி நடித்த படம். சென்னையில் முதல் மூன்று தினங்களில் 49.80 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
2. இது நம்ம ஆளு
சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு சென்ற வார இறுதியில் சென்னையில் 54.38 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 2.49 கோடிகள்.


 
 
1. இறைவி
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இறைவி இருவிதமான விமர்சனங்களை பெற்றுள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் 78.50 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்