வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : புதன், 14 மே 2014 (12:07 IST)

சென்னை சிட்டி வசூல் நிலவரம்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தெனாலிராமன் ஓடி களைத்துவிட மான் கராத்தேக்குதான் அதிர்ஷ்டம்.

சென்ற வார இறுதியிலும் ஏறக்குறைய 3 லட்சங்களை சென்னை மாநகரில் மட்டும் வசூலித்துள்ளது.

வார நாள்களில் 2.6 லட்சங்கள். ஆறு வாரங்கள் முடிவில் சென்னை சிட்டி வசூல் 4.7 கோடிகள்.
 

விஜய் வசந்த் நடித்திருக்கும் என்னமோ நடக்குது வெற்றிப் படம் என்று படம் வெளியானதிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் சென்ற வார இறுதியில் 3.07 லட்சங்களை வசூலித்துள்ளது. வார நாள்களில் 3.7 லட்சங்கள். இதுவரை 22.6 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.
பாலாஜி மோகனின் வாயை மூடி பேசவும் சென்ற வார இறுதியில் 14.2 லட்சங்களையும், வார நாள்களில் 15.3 லட்சங்களையும் வசூலித்துள்ளது. சென்ற ஞாயிறுவரை சென்னை மாநகர் வசூல் 93.7 லட்சங்கள்.
 

 
யாமிருக்க பயமே இந்த வாரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 32.1 லட்சங்களை வசூலித்துள்ளது.
முதலிடத்தில் சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். சென்னையில் சென்ற வார இறுதியில் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 43 லட்சங்களை வசூலித்துள்ளது. மான் கராத்தேயின் ஒன்றரை கோடி மற்றும் தெனாலிராமனின் முக்கால் கோடி ஓபனிங்குடன் ஒப்பிடுகையில் இது சுமாரான ஓபனிங்தான்.