வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (19:40 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் தனி ஒருவன்

5. தாக்க தாக்க:


 
விக்ராந்த் நடித்திருக்கும் தாக்க தாக்க இந்த வாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 8.9 லட்சங்களை வசூலித்துள்ளது. மிகச்சாதாரணமான வசூல்.

4. பாகுபலி:


 
இதுதான் ப்ளாக் பஸ்டர் படம். கத்தியின் சென்னை வசூலை அனாயாசமாக இப்படம் தாண்டியுள்ளது. சென்ற வார இறுதியில் இதன் சென்னை வசூல், 10.70 லட்சங்கள். இதுவரை சென்னையில் மட்டும் 8.10 கோடிகளை தனதாக்கியுள்ளது.

3. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க:


 
ஆர்யா, சந்தானம், தமன்னா இவர்களுடன் டாஸ்மாக்கும் இருந்தும் வசூல் ஒன்றும் பிரமாதமில்லை. சென்ற வார இறுதியில் 14 லட்சங்களை வசூலித்த படம், இதுவரை 2.55 கோடிகளை வசமாக்கியுள்ளது.

2. பாண்டம்:


 
இந்திப் படம் அதுவும் சைப் அலிகான் நடித்த படம் பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடம் பிடிப்பதெல்லாம் நம்ப முடியாத மாற்றங்கள். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 20.18 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

1. தனி ஒருவன்:


 
அசைக்க முடியாத முதலிடத்தில் தனி ஒருவன். மோகன் ராஜாவின் நல்ல த்ரில்லரான இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. விளைவு...? முதல் மூன்று தினங்களில் சென்னையில் 1.29 கோடியை வசூலித்து அனைவரையும் மிரள செய்துள்ளது. ஜெயம் ரவி படங்களில் இதற்குதான் சென்னையில் அதிக ஒபனிங் என்பது முக்கியமானது.