வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (07:25 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் அஞ்சான்

5. சதுரங்க வேட்டை
மனோபாலா தயாரித்துள்ள இப்படம் சென்ற வார இறுதியில் 67 ஆயிரங்கள் மட்டுமே வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் இதுவரையான சென்னை மாநகர வசூல் 1.1 கோடி.


4. வேலையில்லா பட்டதாரி
தனுஷின் வேலையில்லா பட்டதாரி சென்ற வார இறுதியில் 1.4 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 6.6 கோடிகள். இது கோச்சடையானின் வசூலைவிட அதிகம்.


3. கதை திரைக்கதை வசனம் இயக்கம்
 
அனைவரின் பாராட்டை பெற்றுள்ள இப்படம் முதல் மூன்று தினங்களில் 8.7 லட்சங்களையே வசூலித்துள்ளது. படம் நன்றாக இருப்பதான விமர்சனங்கள் வரும் நாட்களில் படத்தின் வசூலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2. ஜிகிர்தண்டா
 
சென்ற வார இறுதியில் இப்படம் 12 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை சிட்டி வசூல் 2.6 கோடி.


1. அஞ்சான்
 
இந்த வருடத்தில் அஞ்சானுக்குதான் அதிக ஓபனிங், கோச்சடையானைவிட. 573 திரையிடல்களில் மூன்றே தினங்களில் 2.35 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.